Monday, December 19, 2011

கால்குலேட்டருக்கு தடை


நம்மில் பெரும்பாலானோர் கணக்குகளைக் செய்வதற்கு, கால்குலேட்டரை பயன்படுத்துகிறோம். இதனால் கடினமான கணக்குகளுக்கான விடைகள் கூட, சில வினாடிகளில் கிடைத்து விடுகிறது. இதே கால்குலேட்டரால் நமது மூளையை பயன்படுத்துவதை மறந்து விடுகிறோம். எனவே நமது சிந்தனை திறன் பாதிக்கப்படுகிறது.
இதனை உணர்ந்து பிரிட்டனில் 11 வயதுக்குட்பட்ட பள்ளிக்குழந்தைகள் கால்குலேட்டர் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பள்ளிக்கல்வி அமைச்சர் நிக் கிப் தெரிவித்துள்ளதாவது:
"கால்குலேட்டர் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டதால், குழந்தைகளின் சுயமாக சிந்திக்கும் திறமை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைகள் சாதாரண கணக்குகளுக்கு கூட, கால்குலேட்டரை நம்பியிருப்பது தவிர்க்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment