Friday, May 27, 2011

மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஆர்வம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அதிக ஆர்வம் செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்வது வழக்கம். பணிநியமனங்களுக்கு பதிவுமூப்பு பின்பற்றப்படுவதால் மாணவர்கள் அனைவரும் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மறுநிமிடமே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன்பு குவிந்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் இடநெருக்கடியை சமாளிப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இருந்தும் பதிவு செய்வதில் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதை தவிர்க்கும் விதமாக ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளும் சிறப்பு திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை எந்தவித சிரமமும் இன்றி படித்த பள்ளிகளிலேயே நேற்று பதிவு செய்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 790 மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆன்-லைன் வசதி செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் வரிசையில் நின்று ரேஷன் கார்டு நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை காண்பித்தவாறு பதிவு செய்தனர். இதற்காக அந்த பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளும் வசதியை உருவாக்கி கொடுத்த தமிழக அரசுக்கு அம்மாவட்ட மாணவர்களும், பெற்றோர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

புதுகை மாவட்டத்தில் 9 அரசு பள்ளி சென்டம் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அபாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் ஒன்பது அரசு உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 51 பள்ளிகள் சென்டம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் ஒன்பது அரசு உயர்நிலைப்பள்ளிகள், ஒன்பது அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள், நான்கு சுயநிதிப்பள்ளிகள், 29 மெட்ரிக் பள்ளிகள் என 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.
* சாதனை படைத்த அரசு பள்ளிகள்: கிருஷ்ணாஜிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயிங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, போச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கிளாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, தாழானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, குருங்களூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி.
* அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள்: கொப்பனாப்பட்டி கலைமகள் உயர்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி தூய மரியன்னை உயர்நிலைப்பள்ளி, ராங்கியம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் உயர்நிலைப்பள்ளி, விராலிமலை புனித திரேசாள் உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, குழிபிறை ராமனாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, கோட்டைக்காடு புனித வளனார் உயர்நிலைப்பள்ளி, விச்சூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் ஆர்.சி., உயர்நிலைப்பள்ளி
* தனியார் சுயநிதிப்பள்ளிகள்: திருமலைராயவரம் புனித வளனார் உயர்நிலைப்பள்ளி, கே.கே.பட்டி ஜீவன் ஜோதி மேல்நிலைப்பள்ளி, கறம்பக்காடு பி.பி.எம்., உயர்நிலைப்பள்ளி, பாண்டிப்பத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி
* மெட்ரிக் பள்ளிகள்: புதுக்கோட்டை எஸ்.எஃப்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குத்தூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.அழகாபுரி எம்.ஆர்.பி., மெட்ரிக் பள்ளி, விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி, மேட்டுச்சாலை மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, கந்தர்வக்கோட்டை அருள்மாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வலையப்பட்டி. சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாத்தூர் பரிமளா கிரிகோரியஸ் மெட்ரிக் பள்ளி, மெய்யபுரம் புனித செபஸ்தியார் மெட்ரிக் பள்ளி, சிவபுரம் எம்.ஆர., மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, அறந்தாங்கி மயில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி ஹோலி கிறாஸ் மெட்ரிக் பள்ளி, கே.ராசிமங்கலம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி, அம்மாப்பட்டிணம் கிரஸண்ட் மெட்ரிக் பள்ளி, அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டிணம் எம்.எச்., மெட்ரிக் பள்ளி, அறந்தாங்கி உமையாள் ஆச்சி மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜாண் மெட்ரிக் பள்ளி, ஐடியல் மெட்ரிக் பள்ளி, வேங்கிடகுளம் செயின்ட் சேவியர் மெட்ரிக் பள்ளி, கறம்பக்குடி குத்தூஸ் மெட்ரிக் பள்ளி, ரீனா மெர்ஸி மெட்ரிக் பள்ளி, மணமேல்குடி ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி சுப பாரதி மெட்ரிக் பள்ளி, மாடர்ன் மெட்ரிக் பள்ளி.

Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வித்திட்டம் தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குளறுபடியை சரிசெய்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டு ம்' என தமிழக அரசை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: கிராமப்பகுதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டங்களுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்த தமிழக கல்வித்துறை முன்வரவேண்டும்.

Saturday, May 21, 2011

புதுகையில் இரவுநேர ஸ்டே பஸ்களை டிப்போவுக்குள் மட்டுமே நிறுத்தணும்:போலீஸார் அறிவிப்பு

புதுக்கோட்டை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் எம்.பி., கனிமொழி கைது சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டனர். இரவுநேர ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டது. பஸ்கள் மீது கல் வீச்சு மற்றும் தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஸ்டே பஸ்களை டிப்போவுக்குள் மட்டுமே நிறுத்த வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நேற்றுமாலை ஆறு மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் 12 டவுன் மற்றும் மப்சல் பஸ்கள் இரவுநேர ஸ்டே பஸ்களாக கிராமப்பகுதிகளில் நிறுத்தி வைப்பது வழக்கம். மணமேல்குடி, எஸ்.பி., பட்டிணம், கொத்தமங்கலம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பஸ்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை ஐந்துமணி வரை இரவுநேர ஸ்டே பஸ்களாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுபோன்று அறந்தாங்கி, பொன்னமராவதி, பட்டுக்கோட்டை, திருச்சி டிப்போக்களிலிருந்து இயக்கப்படும் 60 பஸ்கள் வரை மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட கிராமப்பகுதிகளிலும் இரவுநேர ஸ்டே பஸ்களாக நிறுத்தி வைப்பது வழக்கம். பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு கருதி கிராமப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் இரவுநேர ஸ்டே பஸ்கள் அனைத்தையும் தொடர்புடைய அரசு போக்குவரத்துக்கழக டிப்போக்களில் மட்டுமே நிறுத்தவேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவை போலீஸார் மூலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழக டிப்போக்கள் முன் நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Thursday, May 19, 2011

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிப்பு: புது அரசு முடிவு


சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா, பழையபடி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் சபீதா, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் துறை, தேர்வுத்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான கட்டண அறிவிப்பு குறித்தும், அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.

கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?

பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாடப் புத்தகங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், இந்த அரசு பார்த்து கொள்ளும்.

தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண அறிவிப்பு எப்போது வெளிவரும்?

புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், புதிய கட்டணம் அறிவிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளிவரும்?

பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் நிறைவடைந்ததும், முன்கூட்டியே தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ள கருத்து மூலம், இத்திட்டம் வரும் கல்வியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இத்திட்டத்தை வாபஸ் பெற அரசு நினைத்தாலும், செய்ய முடியாத நிலை இருக்கிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில், ஒன்றரை கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், திடீரென இத்திட்டத்தை வாபஸ் பெற்றால், மாணவர்களுக்கு வேறு பாடப் புத்தகங்களுக்கு வழங்க முடியாது. பழைய திட்டத்தின் கீழ், தேவையான பாடப் புத்தகங்கள் இருப்பில் இல்லை. அதனால், இந்தாண்டு எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை, புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி படைப்புகள் நீக்கம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பல பகுதிகள், 9, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாடு, கவிதை நடை உரைநடை, செம்மொழிப் பாடல், கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும், நீக்கப்பட்ட பகுதிகளாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. வரும், 2012-13ம் கல்வியாண்டில், புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் போது, கருணாநிதி சம்பந்தப்பட்ட பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு அச்சிடப்படும்.

தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்


தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர்.அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.

தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது.

இழப்பீடு அளிப்பதில் மெத்தனம் கலெக்டர் அலுவலகம் ஜப்தி உத்தரவு

புதுக்கோட்டை: இழப்பீடு தொகை அளிப்பதில் வேளாண்மைத்துறை மெத்தனம் காண்பித்ததால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக தளவாடப் பொருட்கள் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட சமரசத்தால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(35). அப்பகுதியில் கேபிள் "டிவி' நிர்வகித்து வருகிறார். 1998ம் ஆண்டு தனது டூ வீலரில் கடைவீதிக்கு சென்று திரும்பிய வெங்கடேஷ் மீது, வேளாண்மைத்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியது. விபத்தில் அவர் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் ஊனம் சரியாகவில்லை. தனக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு வேளாண்மைத் துறையிடமிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு விபத்து இழப்பீடாக 89 ஆயிரம் ரூபாய் மற்றும் வட்டித்தொகை 6,500 ரூபாய் வழங்குமாறு வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் வெங்கடேஷுக்கு ரூ.89 ஆயிரம் வழங்கிய வேளாண்மைத் துறை வட்டித் தொகை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து வட்டித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அதே நீதிமன்றத்தில் வெங்கடேஷ் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு வட்டித் தொகை வழங்க தவறியதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக தளவாடப் பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. தகவலறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வேளாண்மைத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், ஒருமணி நேரத்துக்குள் வட்டித் தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Wednesday, May 18, 2011

தமிழக அமைச்சர்கள் பட்டியல்

ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறைகே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறைநத்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறைகே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறைசி.சண்முகவேலு---தொழில் துறைஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறைஅக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறைசி.கருப்பசாமி---கால்நடைத் துறைபி.பழனியப்பன்---உயர்கல்வித் துறைசி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறைசெல்லூர் கே.ராஜூ---கூட்டுறவுத் துறைகே.டி.பச்சமால்---வனத் துறைஎடப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.எஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.எஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.பி.தங்கமணி---வருவாய்த் துறை.ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.எஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.ஆர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.என்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.என்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.இ.சுப்பையா---நீதித் துறை.புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.எஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறைவி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.என்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை.

தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள மொபைல் எண் அறிவிப்பு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து புதிய எம்.எல்.ஏ.,க்களை மக்கள் தொடர்பு கொள்ள மொபைல் ஃபோன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் 9442166319, ஆலங்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் 9994145555, அறந்தாங்கி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜநாயகம் 9443371482, விராலிமலை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் 9443388155, திருமயம் அ.தி.மு.க, எம்.எல்.ஏ., வைரமுத்து 9443959731, கந்தர்வக்கோடை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் 9442465693 ஆகியவை எண்களில், அந்தந்தபகுதி பொதுமக்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Monday, May 16, 2011

அறந்தாங்கி நேஷனல் மெட்ரிக் பள்ளி ப்ளஸ் 2 தேர்வில் சதமடித்து சாதனை

அறந்தாங்கி: நடந்து முடிந்த ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அறந்தாங்கியில் புதுகை ரோட்டில் அமைந்துள்ள நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளியில் மொத்தம் 33 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 16 பேர் மாணவர், 17 பேர் மாணவியர் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஏ.ஆயிஷாசித்திகா 1,156 மார்க் பெற்று அறந்தாங்கி பள்ளிகளிலேயே முதலிடம் பெற்று கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 188, ஆங்கிலம் 186, இயற்பியல் 199, வேதியியல் 197, உயிரியல் 186, கணிதம் 200.
எம்.கவிதா என்ற மாணவி 1,093 மார்க் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 187, ஆங்கிலம் 171, இயற்பியல் 185, வேதியியல் 184, உயிரியல் 168, கணிதம் 198.
ஏ.ராம்பிரபு என்ற மாணவன் 1,074 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 180, ஆங்கிலம் 157, இயற்பியல் 185, வேதியியல் 183, உயிரியல் 175, கணிதம் 194.
மேலும், 1,000 மார்க்குக்கு மேல் ஐந்து மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். அவர்கள் விபரம்:
ஆயிஷா சித்திகா 1,156, கவிதா 1,093, ராம்பிரபு 1,074, துர்கா தேவி 1,007, கௌசல்யா 1,000.
இப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 100 சதவீதம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், இந்த வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும், வெற்றிக்கு ஒத்துழைப்பு தந்த பெற்றோர்களையும், பள்ளி தாளாளர் முகமது மன்சூர், பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹீமான் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நகரில் முக்கிய பிரமுகர்களான ரோட்டரி சங்கத்தலைவர் பீர்ஷேக், முன்னாள் தலைவர்கள் கைலாசநாதன், சந்திரமோகன், உலகநாதன், ராஜ்மோகன், வீரமாகாளியப்பன், ஆறுமுகம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரிய கழகத்தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கோடைகால இலவச பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோடை அரசு அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம் நேற்று முதல் துவங்கியது. புதுக்கோடை அருங்காட்சியக வளாகத்தில் கோடைகால பயிற்சியில் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் கண்ணாடி ஓவியம் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பயிற்சி வகுப்புகளை ஓவியர்கள் ஐயப்பன், ராஜப்பன் ஆகியோர் நடத்தினர். பயிற்சி முகாமை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாம் மே மாதம் 18 தேதி வரை நடைபெறும்.

Sunday, May 15, 2011

அறந்தாங்கி MLA's


அறந்தாங்கி  MLA's from 1952
1952-1957 - Mr. முஹமது சுலித் மரைகாயர்
1957-1962 - Mr. ராமசாமி தேவர் . S
1962-1967 - Mr. துரைஅரசன் . A
1967-1971 - Mr. துரைஅரசன் . A
1971-1974 - Mr. ராமநாதன்  உடையார் 
1977-1999 - Mr. திருநாவுக்கரசர் . S
1999-2001 - Mr. அன்பரசு 
2001-2006 - Mr. அரசன் . P
2006 - 2011 - Mr. உதயம்  சண்முகம் 
2011--Mr.ராஜநாயகம் . M
M. Rajanayagam, AIADMK candidate for Aranthangi.
.
ராஜநாயகம் . MAIADMK67559Wins
திருநாவுக்கரசர் . SUINC50903Loses
ஷரிப்ப் . K.MIndependent2729Loses
அப்பாதுரை . SIJK2305Loses
சபாபதி . KBJP2218Loses

Saturday, May 14, 2011

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2011




 அதிமுக கூட்டணிவெற்றிதோல்வி
அ.தி.மு.க.14713
தே.மு.தி.க.,2912
மா. கம்யூ.93
இ. கம்யூ.,91
 மூ.மு.க.01
 ம.ம.க.,21
 ச.ம.க.,20
 பு.த.,10
பா.பி.,10
 இ.கு.க.,10
 கொ.இ.‌பே10






திமுக கூட்டணிவெற்றிதோல்வி
தி.மு.க.2396
காங்.,558
பா.ம.க.,327
வி.சி.010
 கொ.மு.க.,07
 இ.யூ.மு.லீக்03
 மூ.மு.க.,01
 பெ.ம.க01







மற்றவைவெற்றிதோல்வி
பா.ஜ.,00
 இ.ச.ஜ.க.,00
 ஐ.ஜ.த.,00
 யா.ம.,00
 ஜனதா00
 இ.ஜ.க.,00
 நா.ம.க.,00
 பு.பா.,00
 பகுஜன்00
 மக்கள் சக்தி00
 பா.பி00
 சுயேட்சை00

1. Alandur - S. RAMACHANDRAN (DMDK)
2. Alangudi - KRISHNAN.KUPA (AIADMK)
3. Alangulam - P. G. RAJENDRAN (AIADMK)
4. Ambasamudram - E SUBAYA All (AIADMK)
5. Ambattur - VEDHACHALAM. S (AIADMK)
6. Ambur - ASLAM BASHA.A (MMK)
7. Anaikattu - KALAIARASU.M. (PMK)
8. Andipatti - THANGATAMILSELVAN (AIADMK)
9. Anna Nagar - GOKULA INDIRA S (AIADMK)
10. Anthiyur - RAMANITHARAN.S.S (AIADMK)
11. Arakkonam - S.RAVI (AIADMK)
12. Arani - BABU MURUGAVEL.R.M (DMDK)
13. Aranthangi - RAJA NAYAGAM M (AIADMK)
14. Aravakurichi - PALLANISHAMY.K.C (DMK)
15. Arcot - R. SRINIVASAN (AIADMK)
16. Ariyalur - MANIVEL, DURAI. (AIADMK)
17. Aruppukkottai - VAIGAICHELVAN (AIADMK)
18. Athoor - PERIYASAMY.I (DMK)
19. Attur - MADHESWARAN.S (AIADMK)
20. Avadi - ABDUL RAHIM.S (AIADMK)
21. Avanashi - KARUPPASAMY.M.A. (AIADMK)
22. Bargur - K.E.KRISHNAMURTHI (AIADMK)
23. Bhavani - NARAYANAN.P.G (AIADMK)
24. Bhavanisagar - SUNDARAM P.L (CPI)
25. Bhuvanagiri - SELVI (AIADMK)
26. Bodinayakanur - PANNEERSELVAM O (AIADMK)
27. Chengalpattu - D. MURUGESAN (DMDK)
28. Chengam - SURESHKUMAR.T (DMDK)
29. Chepauk-Thiruvallikeni - ANBAZHAGAN. J (DMK)
30. Cheyyar - SUBRAMANIAN.N (AIADMK)
31. Cheyyur - V. S . RAJI (AIADMK)
32. Chidambaram - K.BALAKRISHNAN CPI-M)
33. Coimbatore (North) - MALARAVAN T. (AIADMK)
34. Coimbatore (South) - DORAISWAMY R ALIAS CHALLENGER DORAI (AIADMK)
35. Colachal - PRINCE.J.G (INC)
36. Coonoor - RAMACHANDRAN.K (DMK)
37. Cuddalore - M.C. SAMPATH (AIADMK)
38. Cumbum - ERAMAKRISHNAN.N (DMK)
39. Dharapuram - PONNUSAMY.K (AIADMK)
40. Dharmapuri - BASKAR A (DMDK)
41. Dindigul - BALABHARATHI.K. (CPI-M)
42. Dr.Radhakrishnan Nagar - VETRIIVEL P (AIADMK)
43. Edappadi - PALANISWAMI.K (AIADMK)
44. Egmore - NALLATHAMBI K (DMDK)
45. Erode (East) - CHANDHIRAKUMAR V.C (DMDK)
46. Erode (West) - RAMALINGAM K.V (AIADMK)
47. Gandharvakottai - SUBRAMANIAN. N (AIADMK)
48. Gangavalli - SUBHA.R (DMDK)
49. Gingee - GANESH KUMAR.A (PMK)
50. Gobichettipalayam - SENGOTTAIYAN K.A (AIADMK)
51. Gudalur - THIRAVIDAMANI.M (DMK)
52. Gudiyattam - K. LINGAMUTHU (CPI)
53. Gummidipoondi - SEKAR C H (DMDK)
54. Harbour - KARUPPIAH .PALA (AIADMK)
55. Harur - DILLIBABU P (CPI-M)
56. Hosur - K. GOPINATH (INC)
57. Jayankondam - GURUNATHAN J (PMK)
58. Jolarpet - VEERAMANI, K.C. (AIADMK)
59. Kadayanallur - CHENDUR PANDIAN .P (AIADMK)
60. Kalasapakkam - AGRI.KRISHNAMURTI.S.S (AIADMK)
61. Kallakurichi - K.ALAGUVELU (AIADMK)
62. Kancheepuram - V. SOMASUNDARAM (AIADMK)
63. Kangayam - NATARAJ.NSN (AIADMK)
64. Kanniyakumari - PATCHAIMAL.K.T (AIADMK)
65. Karaikudi - PALANICHAMY.CHOLAN.CT (AIADMK)
66. Karur - SENTHIL BALAJI, V. (AIADMK)
67. Katpadi - DURAIMURUGAN (DMK)
68. Kattumannarkoil - N.MURUGUMARAN (AIADMK)
69. Kavundampalayam - ARUKUTTY V C (AIADMK)
70. Killiyoor - JOHN JACOB.S (INC)
71. Kilpennathur - ARANGANATHAN.A.K (AIADMK)
72. Kilvaithinankuppam - THAMIZHARASAN.C.K (AIADMK)
73. Kilvelur - MAHALINGAM P (CPI-M)
74. Kinathukadavu - DAMODARAN S (AIADMK)
75. Kolathur - STALIN M.K. (DMK)
76. Kovilpatti - KADAMBUR RAJU C (AIADMK)
77. Krishnagiri - K.P.MUNUSAMY (AIADMK)
78. Krishnarayapuram - KAMARAJ.S (AIADMK)
79. Kulithalai - PAPPASUNDARAM.A (AIADMK)
80. Kumarapalayam - THANGAMANI.P (AIADMK)
81. Kumbakonam - ANBALAGAN.G (DMK)
82. Kunnam - SIVASANKAR.S.S (DMK)
83. Kurinjipadi - R.RAJENDRAN (AIADMK)
84. Lalgudi - SOUNDARAPANDIAN.A (DMK)
85. Madathukulam - C.SHANMUGAVELU (AIADMK)
86. Madavaram - MOORTHY V (AIADMK)
87. Madurai Central - SUNDARRAJAN R (DMDK)
88. Madurai East - TAMILARASAN K (AIADMK)
89. Madurai North - BOSE.A.K (AIADMK)
90. Madurai South - ANNADURAI R (CPI-M)
91. Madurai West - RAJU K (AIADMK)
92. Madurantakam - S. KANITHA (AIADMK)
93. Maduravoyal - BEEM RAO. G (CPI-M)
94. Mailam - NAGARAJAN.P (AIADMK)
95. Manachanallur - POONACHI. T.P. (AIADMK)
96. Manamadurai - GUNASEKARAN.M (AIADMK)
97. Manapparai - CHANDRA SEKAR R (AIADMK)
98. Mannargudi - RAJAA, T.R.B. (DMK)
99. Mayiladuthurai - R.ARULSELVAN (DMDK)
100. Melur - SAMY R (AIADMK)
101. Mettuppalayam - CHINNARAJ O K (AIADMK)
102. Mettur - PARTHIBAN.S.R. (DMDK)
103. Modakkurichi - KITTUSAMY R.N (AIADMK)
104. Mudhukulathur - MURUGAN M (AIADMK)
105. Musiri - N.R.SIVAPATHY (AIADMK)
106. Mylapore - RAJALAKSHMI R (AIADMK)
107. Nagapattinam - K A JAYAPAL (AIADMK)
108. Nagercoil - NANJIL MURUGESAN.A (AIADMK)
109. Namakkal - BASKAR.K.P.P. (AIADMK)
110. Nanguneri - A.NARAYANAN (AIADMK)
111. Nannilam - KAMARAJ.R (AIADMK)
112. Natham - VISWANATHAN.R. (AIADMK)
113. Neyveli - M.P.S.SIVASUBRAMANIYAN (AIADMK)
114. Nilakkottai - RAMASAMY.A (PT)
115. Oddanchatram - SAKKARAPANI.R (DMK)
116. Omalur - KRISHNAN.C (AIADMK)
117. Orathanadu - R.VAITHILINGAM (AIADMK)
118. Ottapidaram - DR.K.KRISHNASAMY (PT)
119. Padmanabhapuram - DR.PUSHPA LEELA ALBAN (DMK)
120. Palacodu - ANBALAGAN K P (AIADMK)
121. Palani - VENUGOPALU. K.S.N, (AIADMK)
122. Palayamkottai - T.P.M.MOHIDEEN KHAN (DMK)
123. Palladam - PARAMASIVAM.K.P (AIADMK)
124. Pallavaram - P. DHANSINGH (AIADMK)
125. Panruti - P.SIVAKOLUNTHU (DMDK)
126. Papanasam - R. DORAIKKANNU (AIADMK)
127. Pappireddippatti - PALANIAPPAN P (AIADMK)
128. Paramakudi - SUNDARARAJ.S (AIADMK)
129. Paramathi-Velur - THANIYARASU.U (AIADMK)
130. Pattukkottai - N.R.RENGARAJAN (INC)
131. Pennagaram - NANJAPPAN N (CPI)
132. Perambalur - TAMIZHSELVAN.R (AIADMK)
133. Perambur - SOUNDARARAJAN A (CPI-M)
134. Peravurani - C. ARUNPANDIAN (DMDK)
135. Periyakulam - LASER.A (CPI-M)
136. Perundurai - VENKATACHALAM.N.D (AIADMK)
137. Pollachi - MUTHUKARUPPANNASAMY M K (AIADMK)
138. Polur - JAYASUDHA.L (AIADMK)
139. Ponneri - PON. RAJA (AIADMK)
140. Poompuhar - PAVUNRAJ.S (AIADMK)
141. Poonmallae - MANIMARAN R (AIADMK)
142. Pudukkottai - MUTHUKUMARAN.P (CPI)
143. Radhapuram - S.MICHAEL RAYAPPAN (DMDK)
144. Rajapalayam - K.GOPALSAMY (AIADMK)
145. Ramanathapuram - JAWAHIRULLA (MMK)
146. Ranipet - A.MOHAMMED JOHN (AIADMK)
147. Rasipuram - DHANAPAL.P (AIADMK)
148. Rishivandiyam - VIJAYKANT (DMDK)
149. Royapuram - JAYAKUMAR. D (AIADMK)
150. Saidapet - SENTHAMIZHAN.G (AIADMK)
151. Salem (North) - ALAGAPURAM R MOHANRAJ (DMDK)
152. Salem (South) - SELVARAJU.M.K. (AIADMK)
153. Salem (West) - VENKATACHALAM.G (AIADMK)
154. Sankarankovil - KARUPPASAMY.C (AIADMK)
155. Sankarapuram - MOHAN.P (AIADMK)
156. Sankari - VIJAYALAKSHMI PALANISAMY.P (AIADMK)
157. Sattur - R.B.UTHAYAKUMAR (AIADMK)
158. Senthamangalam - SANTHI.R (DMDK)
159. Sholavandan - KARUPPIAH M V (AIADMK)
160. Sholingur - P.R.MANOKAR (DMDK)
161. Shozhinganallur - K.P. KANDAN (AIADMK)
162. Singanallur - CHINNASAMY R (AIADMK)
163. Sirkazhi - SAKTHI . M (AIADMK)
164. Sivaganga - GUNASEKARAN.S (CPI)
165. Sivakasi - RAJENTHRA BHALAJI.K.T (AIADMK)
166. Sriperumbudur - R. PERUMAL (AIADMK)
167. Srirangam - J JAYALALITHAA (AIADMK)
168. Srivaikuntam - SHUNMUGANATHAN.S.P (AIADMK)
169. Srivilliputhur - V. PONNUPANDI (CPI)
170. Sulur - THINAKARAN K (DMDK)
171. Tambaram - T. K. M. CHINNEYAH (AIADMK)
172. Tenkasi - SARATH KUMAR.R (AIADMK)
173. Thalli - RAMACHANDRAN. T. (CPI)
174. Thanjavur - M.RENGASAMY (AIADMK)
175. Thiru-Vi-Ka-Nagar - NEELAKANDAN. V (AIADMK)
176. Thirumangalam - MUTHURAMALINGAM M (AIADMK)
177. Thirumayam - VAIRAMUTHU. P.K. (AIADMK)
178. Thiruparankundram - RAJA A.K.T (DMDK)
179. Thiruporur - K. MANOHARAN (AIADMK)
180. Thiruthuraipoondi - K.ULAGANATHAN (CPI)
181. Thiruvaiyaru - M.RETHINASAMI (AIADMK)
182. Thiruvallur - RAMANA B.V (AIADMK)
183. Thiruvarur - KARUNANIDHI. M (DMK)
184. Thiruverumbur - S.SENTHILKUMAR (DMDK)
185. Thiruvidaimarudur - CHEZHIAAN.GOVI (DMK)
186. Thiruvottiyur - KUPPAN, K. (AIADMK)
187. Thiyagarayanagar - KALAIRAJAN V (AIADMK)
188. Thondamuthur - VELUMANI S P (AIADMK)
189. Thoothukkudi - CHELLAPANDIAN S.T (AIADMK)
190. Thousand Lights - VALARMATHI. B (AIADMK)
191. Thuraiyur - INDRAGANTHI T (AIADMK)
192. Tindivanam - HARIDOSS.D (AIADMK)
193. Tiruchendur - ANITHA R RADHAKRISHNAN (DMK)
194. Tiruchengodu - SAMPATHKUMAR. P (DMDK)
195. Tiruchirappalli (East) - MANOHARAN R (AIADMK)
196. Tiruchirappalli (West) - N.MARIAM PITCHAI (AIADMK)
197. Tiruchuli - THANGAM THENARASU (DMK)
198. Tirukkoyilur - VENKATESAN.L (DMDK)
199. Tirunelveli - NAINAR NAGENTHRAN (AIADMK)
200. Tirupattur - K.G.RAMESH (AIADMK)
211. Tiruppattur - PERIYAKARUPPAN.KR (DMK)
212. Tiruppur (North) - ANANDAN.M.S.M (AIADMK)
213. Tiruppur (South) - THANGAVEL.K (CPI-M)
214. Tiruttani - ARUNSUBRAMANIAN. M (DMDK)
215. Tiruvadanai - THANGAVELAN SUBA (DMDK)
216. Tiruvannamalai - VELU E.V (DMK)
217. Tittakudi - K.TAMIL AZHAGAN (DMDK)
218. Udhagamandalam - BUDHICHANDHIRAN (AIADMK)
219. Udumalaipettai - POLLACHI JAYARAMAN. V (AIADMK)
210. Ulundurpettai - KUMARAGURU.R (AIADMK)
211. Usilampatti - KATHIRAVAN P V
212. Uthangarai - MANORANJITHAM (AIADMK)
213. Uthiramerur - P. GANESAN (AIADMK)
214. Valparai - ARUMUGHAM M (CPI)
215. Vandavasi - GUNASEELAN.V (AIADMK)
216. Vaniyambadi - SAMPATH KUMAR .GOVI (AIADMK)
217. Vanur - JANAKIRAMAN.I (AIADMK)
218. Vasudevanallur - DR.DURAIAPPA.S.,MBBS., (AIADMK)
219. Vedaranyam - N.V.KAMARAJ (AIADMK)
220. Vedasandur - PALANICHAMY. S. (AIADMK)
221. Veerapandi - SELVAM.S.K (AIADMK)
222. Velachery - ASHOK M.K. (AIADMK)
223. Vellore - VIJAY.DR.V.S. (AIADMK)
224. Veppanahalli - T.SENGUTTUVAN (DMK)
225. Vikravandi - RAMAMURTHY.R (CPI-M)
226. Vilathikulam - MARKANDAYAN. V (AIADMK)
227. Vilavancode - VIJAYADHARANI.S (INC)
228. Villivakkam - PRABHAKAR JCD (AIADMK)
229. Villupuram - SHANMUGAM.C.V (AIADMK)
230. Viralimalai - VIJAYA BASKER. C (AIADMK)
231. Virudhunagar - PANDIARAJAN.K (DMDK)
232. Virugampakkam - PARTHA SARATHY B (DMDK)
233. Vriddhachalam - V. MUTHUKUMAR (DMDK)
234. Yercaud 83 PERUMAL.C (AIADMK)