Monday, December 19, 2011

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிஎச்.டி.


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் பிரிவில் பிஎச்.டி. சேர விரும்புபவர்களுக்கான நுழைவுத் தேர்வு 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி நடைபெறுகிறது.
பி.எஸ்சி., அல்லது எம்.எஸ்சி.,யில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது அறிவியல் தொடர்பான பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்களாவர்.
பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வெழுதி இறுதி முடிவிற்காக காத்திருப்பவர்களும் இத்தேர்வை எழுத தகுதியானவர்களாவர். ஆனால், 2012ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் அவர்களது மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டும் பிஎச்.டி.யில் சேரலாம்.
இத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இளநிலை ஆராய்ச்சியாளருக்கான உதவித்தொகை அளிக்கப்படும். அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டில் மாதந்தோறும் ரூ.16,000மும், 3, 4ம் ஆண்டுகளில் ரூ.18,000மும் வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 2012, ஜனவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வைக் கொண்டு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

No comments:

Post a Comment