Monday, December 19, 2011

உயர்கல்விக்கு மத்திய அரசின் நிதி உயர வேண்டும்


இந்தியாவில் உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் நிதி உயர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், பேராசிரியர் வேத் பிரகாஷ் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மஹாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் 60வது பட்டமளிப்பு விழாவில் பேசிய பேராசிரியர் பிரகாஷ், இந்தியாவில் நல்ல தரமான கல்வி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.
1980ம் ஆண்டு கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அரசு அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அது அப்போதைய கல்வி வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், தற்போது மத்திய அரசு இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு என்று அளவை நிர்ணயித்து அதே சமயம், உயர் கல்வியில் மத்திய அரசின் பங்களிப்பை உயர்த்திட வேண்டும்.
இதேப்போல, ஒவ்வொரு பல்கலையிலும் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்க நிதி இருக்கும். இவற்றை பல்கலைக்கழகங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment