Tuesday, November 22, 2011

எச்சரிக்கை... ஏ. டி. எம். எத்தர்கள்! யார் இவர்கள்? முறியடிப்பது எப்படி? யுவகிருஷ்ணா


திகைத்து நிற்கிறது போலீஸ்! காரணம்ஏ.டி.எம். கார்டு மோசடிகள்! இது தொடர்பாகதினமும் சென்னை போலீஸிற்கு 20 புகார்களாவது வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏ.டி.எம். எத்தர்கள் சூப்பர் மார்க்கெட்டுகள்ஜவுளிக் கடைநகைக்கடை,ஹோட்டல்கள்பெட்ரோல் பங்க்குகள் என்று நீக்கமற நிறைந்து,அங்கு பணிபுரியும் ஆட்களின் உதவியுடன் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களைத் திருடிபோலி கார்டு தயாரித்தும்ஆன்லைன் மூலமாகவும் பணத்தைக் கையாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை மூன்று கோடி ரூபாய்க்குமேல் பணம் திருடப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இரண்டு அப்பாவிகளின் சோகக் கதைகளைப் பார்ப்போம்...

ஜி.சிவக்குமார் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர். பூந்தமல்லியில் இருந்த ஒரு ஏ.டி.எம். சென்டருக்கு பணம் எடுக்கப் போனார். மிஷினில் கார்டை சொருகிபின் நம்பரை டைப் செய்த நேரத்தில் அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அழைப்பு தந்த சுவாரஸ்யத்தில் பேசிக்கொண்டே வெளியே வந்துவிட்டார். பேச்சு முடிந்தவுடன் திரும்ப மிஷின் அருகில் வந்தவர்தன்னுடைய டெபிட் கார்டுமிஷினில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சில நிமிடங்கள் கழித்து அவருடைய மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்ததுஅதாவது அவரது கார்டில் இருந்து 29,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக. ஏ.டி.எம். சென்டரில் இவரைக் கவனித்துக் கொண்டிருந்த திருடன் எவனோஇவரது செல்போன் அழைப்பை பயன்படுத்திக் கொண்டு பணத்தை ஆட்டை போட்டிருக்கிறான். பிற்பாடு அந்தத் திருடன் ஒரு நகைக்கடையில் இந்த டெபிட் கார்டைப் பயன்படுத்தியபோது கையும்கார்டுமாக மாட்டினான்.

சந்தோஷ் தனக்கு வந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் அவருக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கியில் இருந்து வந்ததைப்போல ஒரு போலி மின்னஞ்சலைக் கண்டார். அது போலி என்று அறியாமல், ‘க்ளிக்’ செய்துவிடஒரு போலி வெப்சைட் புதியதாகத் திறந்தது. உங்களுடைய புதிய தகவல்கள் தேவை’ என்று அந்த வெப்சைட் கோரியதால்வங்கிக் கணக்கு எண்பின் நம்பர் ஆகியவற்றைச் செலுத்தி வெப்சைட்டுக்குள் நுழைந்துஅந்தத் தளம் கேட்ட சில தகவல்களைக் கொடுத்தார்.

மேலும் சில நிமிடங்களில் அவரது வங்கிக் கையிலிருப்பிலிருந்த பணம் 5,05,000 மொத்தம் ஆறு பரிவர்த்தனைகளில் வேறு வேறு அக்கவுண்டுக்கு உடனடியாக மாற்றப்பட்டு விட்டது.

இப்படி பல்வேறு விஷயங்களில் ஏமாந்தவர்களும் பல்வேறு மோசடிச் சம்பவங்களும் ஏராளம்...

இந்த ஏ.டி.எம். எத்தர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்அவற்றைப் பார்ப்பதற்குமுன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்துவிடுவோம்.

கம்ப்யூட்டர் தொடர்பான தொழில்களுக்கு பெயர்போன ஐ.பி.எம். நிறுவனம்கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்குப் பரிசளித்த அருமையான தொழில்நுட்பம் ஏ.டி.எம். சுருக்கமாக அழைக்கப்படும்Automated Teller Machine.

இந்த ஏ.டி.எம். தொழில்நுட்பம் பலவகைகளில் நம் வாழ்க்கையை சுலபமாக்குகிறது. வங்கிக்குச் சென்றுபடிவம் எழுதிவரிசையில் நின்றுடோக்கன் வாங்கிபணம் வாங்கும் வேலையெல்லாம் இன்று இல்லவே இல்லை. நேர விரயம் இல்லை. பணம் எடுக்க வங்கி பாஸ்புக் கூடத் தேவையில்லை.

இப்போதெல்லாம் வங்கிகளில் வழங்கப்படும் கார்டுகள் வெறும் பணம் எடுக்கும் அட்டைகளாக மட்டுமின்றிடெபிட் கார்டு எனப்படும் பணம் இருப்பு அட்டைகளாகவும் செயல்படுகின்றன. பணம் எடுக்க மட்டுமல்லாமல்மளிகைப்பொருட்கள் கூட வாங்கலாம். பெட்ரோல் போடலாம். ஹோட்டலில் சாப்பிடலாம். பர்ஸ் புடைக்க பணத்தை சுமந்து செல்லத் தேவையில்லை. ரிஸ்க் குறைவு. பயன் அதிகம்.

எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள்இப்போது தம் ஊழியர்களுக்கு சம்பளத்தைப் பணமாகத் தருவதில்லை. வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்துவிடுகிறார்கள். உங்கள் பணத்தை நீங்கள் கையில் கூட தொட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லா பணப் பரிவர்த்தனைகளையும் உள்ளங்கைக்குள் அடங்கும் அட்டை மூலமாகவே செய்துகொள்ளலாம். இணையம் மூலமாக வீட்டுக்குள் இருந்தே ஏ.டி.எம். அட்டையைக் கொண்டு எதையும் வாங்கி விட முடியும் என்கிற அளவுக்கு நிலைமை முன்னேறியிருக்கிறது.

எல்லாம் சரிநல்ல விஷயம்தான். ஆனால்தொழில்நுட்பம் எவ்வளவுதான் பாதுகாப்பானதாக இருந்தாலும்அதை உடைப்பதுதானே திருடர்களின் வேலைசமீபகாலமாக திருடர்கள் திருடுவது பணத்தையல்ல,ஏ.டி.எம். கார்டை அல்லது கார்டுக்குள் அடங்கியிருக்கும் தகவல்களை. முன்பு மாதிரி வரி வரி பனியன் போட்டகன்னத்தில் மரு ஒட்டிய பிக்பாக்கெட் காரர்கள் இப்போது இல்லை. மாறாக ஜீன்ஸும்டீஷர்ட்டும் அணிந்த டீசண்டான திருடர்கள் பெருகிவிட்டார்கள். அரை பிளேடை எடுத்துக்கொண்டு நெரிசலான பஸ்களில் ஏறிஇவர்கள் தொழில் செய்வதில்லை. சொல்லப்போனால் இருக்கும் அறையைக் கூட விட்டு வெளியேறாமல்உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை (அதாவது வங்கிக் கையிருப்பை)லூட்’ அடிக்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது இங்கே?
ஏ.டி.எம். எப்படி இயங்குகிறது?

ஏ.டி.எம். அட்டைகள் பிளாஸ்டிக்கில் உருவாக்கப் படுகின்றன. இவற்றின் பின்புறம் கறுப்பு நிறத்தில் ஒரு காந்தப்பட்டை ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் பட்டையில்தான் வங்கிக் கணக்கு மொத்தமும் அடங்கியிருக்கிறது. ஓர் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் எண்உலகின் வேறு எந்த அட்டைக்கும் இருக்கவே இருக்காது (Unique No). காந்தப் பட்டையில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களைஏ.டி.எம். இயந்திரத்தில் இணைக்கப் பட்டிருக்கும் கார்டு ரீடரால் படித்தறிய முடியும். அதன் மூலமாகவே இருப்பில் இருக்கும் தொகைஎவ்வளவு பணத்தைக் கொடுக்க முடியும் போன்ற தகவல்களைமனித உழைப்பு கோராமல் அதுவாகவே முடிவு செய்துகொள்ளமுடிகிறது.

ஏ.டி.எம். இயந்திரங்கள் டெலிபோன் தொடர்பினைக் கொண்டுமோடம் மூலமாக ஏ.டி.எம். கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனுடைய தொடர்புத் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட நம்முடைய இணையத் தொடர்பு மாதிரிதான். ஏ.டி.எம்கள்வங்கிகளுக்கு இடையேயான பிரத்யேக நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் என்பதால்தகவல்கள் உடனுக்குடன் துல்லியம் பெறுகிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்குகிறது. இது மிகவும் நல்ல தொழில்நுட்பம்தான். ஆனால்அதற்கு நேரெதிரான கெட்ட’ தொழில்நுட்பமும் வளரும் என்பதுதானே யதார்த்தம்.

இனி ஏ.டி.எம். எத்தர்களின் லீலைகளைப் பார்க்கலாம்...

எத்தர்களில் இத்தனை வகைகளா?

ஏ.டி.எம். இயந்திரத்தையே உடைத்துபணத்தைக் கொள்ளையடிப்பது ஒரு வகை. இது கிட்டத்தட்ட பேங்க் லாக்கரைக் கொள்ளையடிப்பதற்குச் சமமானது. இது பாரம்பரியமான திருட்டு முறை. ஒவ்வொரு ஏ.டி.எம். சென்டரிலும் ரகசிய கேமிரா வசதி உண்டு. அது மட்டுமின்றி,ஏ.டி.எம். கொள்ளையடிக்கப்படும் போதுஅருகிலிருக்கும் காவல் நிலையத்திலும் அலாரம் அடிக்கும். மேலும் ஒவ்வொரு சென்டருக்கும் வங்கிகளில் இருப்பதைப் போன்றே செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் தகர்த்துக் கொள்ளையடிப்பது என்பது பெரும்பாலும் சாத்தியமாகாத விஷயம். ஆனாலும் துரதிருஷ்டவசமாக சில நேரங்களில் சாத்தியமாகியிருக்கிறது. கொள்ளை நடந்துகொண்டிருக்கும்போதே காவல்துறை ஏ.டி.எம். மிஷினும்கையுமாக கொள்ளைக்காரர்களைப் பிடித்த சம்பவங்களும் உண்டு.

இந்த முறையில் ரிஸ்க்’ அதிகம் என்பதால்ஏ.டி.எம். கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் கொள்ளை அடிப்பது திருடர்களின் வழக்கமாக இருக்கிறது.

ஏ.டி.எம். கேபின்களில் நீங்கள் அட்டையை நுழைத்துபணமெடுக்க முற்படும்போது உங்கள் முதுகுக்குப் பின்னால் யாரோ நின்றுகொண்டுஉங்கள் ரகசிய பின் நம்பரைநீங்கள் டைப் செய்யும்போதே பார்த்துத் தெரிந்துகொள்வார். இதற்குப் பெயர் Shoulder surfing பிற்பாடு உங்கள் கார்டை அவர் திருடிவிட்டால்பணத்தை ஆட்டை போடுவது வெகு சுலபம். நண்பராய் உங்களோடு அறிமுகமாகிபேசிப்பழகி ஏ.டி.எம். பாஸ்வேர்டை அறிந்துகொள்வது இன்னொரு முறை. Social engineering என்று இந்தத் திருட்டு முறையை சொல்கிறார்கள். இந்த இரண்டு முறையிலுமே உங்கள் அஜாக்கிரதை அல்லது அப்பாவித்தனத்தால் நீங்களே திருடனுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கிறீர்கள்.

இந்த இருமுறைகளை தவிர்த்துப் பார்த்தால்உடல்ரீதியான தாக்குதலை ஏ.டி.எம். கார்டு உரிமையாளர் மீதுஒரு திருடன் பிரயோகிப்பது என்பது மற்றுமொரு முறை. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏ.டி.எம். சென்டருக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். வழக்கமான வழிப்பறி மாதிரியே இதுவும் நடக்கும். கத்தியைக் காட்டியோ அல்லது வேறுமுறையில் அச்சுறுத்தியோ ஏ.டி.எம். கார்டைப் பிடுங்கிஉரிமையாளரின் வாயிலேயே ரகசிய பாஸ்வேர்டு நம்பரையும் பெற்றுக் கொள்ளை அடிக்கும் முறை இது.

இதெல்லாம் உடல் வலிமையும் சராசரி அறிவும் கொண்ட திருடர்கள் செய்யும் வேலை. அல்ட்ரா மாடர்ன் திருடர்கள் தினுசு தினுசான வேறு வேறு முறைகளில் டெக்னிக்கலாக நம்மை அலறவைக்கிறார்கள்.

Lebanese Loop என்றொரு திருட்டுமுறை இருக்கிறது. ஏ.டி.எம்மில் நீங்கள் கார்டை சொருகும் இடத்தில்ஒரு கருவியைப் பொருத்திவிடுவார்கள். அப்பாவியான நீங்களோ கார்டை சொருகி,ரகசிய பின் நம்பரை அழுத்திபணம் பெற வேண்டிய ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். பணமும் வராதுநீங்கள் சொருகிய கார்டும் மிஷினிலிருந்து திரும்ப வராது. உடனடியாக நீங்கள் பதட்டம் அடைவீர்கள். அங்கேயே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த திருடன்உடனே உங்களுக்கு உதவ(?) நல்லவன்போல பாய்ந்து வருவான். இன்னொரு முறை பின் நம்பரை டைப் பண்ணுங்க சார்’ என்பான். நீங்களும் விஷயம் தெரியாமல்அவன் எதிரிலேயே டைப்’ செய்வீர்கள். அப்படியும் பிரச்சினை தீராது. மிஷினில் ஏதோ பிரச்சினை என்றுவங்கியில் புகார் செய்துகொள்ளலாம் என்று கிளம்ப முடிவெடுப்பீர்கள். நீங்கள் கிளம்பிய பிறகுஏ.டி.எம்மில் பொருத்தப்பட்ட அந்தத் திருட்டுக் கருவியை எடுத்துவிட்டுஉங்கள் அட்டையிலிருக்கும் பணம் மொத்தத்தையும் அந்த நல்லவன்ஆட்டையைப் போட்டுவிடுவான். உங்கள் பின் நம்பரை அவன் எதிரில் நீங்கள் டைப் செய்தபோதுஅவன் மனதுக்குள் மனப்பாடம் செய்துவிட்டிருப்பான்.

Card Skimming அடுத்த வகை. ஏ.டி.எம். மிஷினில் ஒரு போலியான மிஷின் ஒன்றினை உருவாக்கிப் பொருத்தியிருப்பார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் கார்டை சொருகியதுமே உங்கள் வங்கி அக்கவுண்ட் நம்பர்கையிருப்புபின் எண் என மொத்த ஜாதகத்தையும் அந்தப் போலிக் கருவி உருவிநினைவில் வைத்துக் கொள்ளும். இந்தத் தகவல்களைக்கொண்டு இணையம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்அல்லது அதே தகவல்களை வைத்து அச்சு அசலாக உங்கள் கார்டு மாதிரியே டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடவும் முடியும். அதாவதுஉங்கள் கார்டுக்குப் பின்னாலிக்கும் காந்தப் பட்டையைப்@பால போலியாகச் செய்தால் போதுமானது.

Phishing எனப்படும் முறைதான் பிரபலமானதும்இன்றைய தேதியில் பரவலானதும் ஆகும். இது இணையம் மூலமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே தகவல்களைத் திருடுவது ஆகும். உதாரணத்துக்குஉங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு இ-மெயில் வரும். நீங்களும் வங்கியில் இருந்துதானே கேட்கிறார்கள் என்று விஷயம் தெரியாமல் அந்த இ-மெயில் கேட்கும் தகவல்களை யோசிக்காமலேயே கொடுத்து விடுவீர்கள். உண்மையில் அந்த இ-மெயில்உங்கள் வங்கியிடமிருந்து வந்திருக்காது. யாரோ ஒரு சைபர் திருடன் வங்கிக்குப் போலியான வெப்சைட்டை உருவாக்கிஅதன் மூலமாக உங்களுக்கு இ-மெயில் அனுப்பிஉங்கள் தகவல்களைத் திருடிவிடுவார். உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மிகச் சுலபமாக எடுக்கஉங்களை சுலபமாக ஏமாற்ற இம்முறையே சிறந்ததாக இருக்கிறது.

ஆன்லைன் பேங்கிங்’ எனப்படும் இணையமுறையில் வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொதுவான இடங்களில் வங்கிக் கணக்கைக் கையாளுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். Key Logger எனப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உங்கள் கார்டு எண்சி.வி.வி. எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை மிகச் சுலபமாக இங்கெல்லாம் திருட வாய்ப்பிருக்கிறது.

பெட்ரோல் பங்க்சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை. Decoder மிஷின்கள் மூலமாக உங்கள் அட்டையை டூப்ளிகேட் செய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவேஅட்டையை அதற்குரிய மிஷினில் சம்பந்தப்பட்ட அலுவலர் தேய்ப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டே இருப்பது நல்லது. சம்பந்தமில்லாத வேறு மிஷின்களில் தேய்க்க முயற்சித்தால்உடனடியாக ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் கொரியாவில் ஓர் அதிநவீனத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஏ.டி.எம். கார்டையோகிரெடிட் கார்டையோ ஒரு மிஷினில் தேய்க்க வேண்டிய அவசியமின்றிரிமோட் அடிப்படையில் - அதாவது அந்த மிஷினுக்கு அருகில் கொண்டுச் சென்றாலே போதும் - கார்டைத் தேய்க்கும் தொழில்நுட்பம் அது. உங்கள் அனுமதியின்றியே நீங்கள் அந்த மிஷினுக்கு அருகில் நிற்கும்போது உங்கள் அட்டையைத் தேய்த்துவிடலாம்.

தினுசு தினுசாக திருடர்கள் வருகிறார்கள். எந்தவொரு தொழில் நுட்பத்துக்கும்சவால் விடும் எதிர்த் தொழில்நுட்பத்தை உடனடியாக உருவாக்கி விடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்கள் வங்கிக் கையிருப்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

  • உங்கள் ஏ.டி.எம். அட்டையை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசரத்துக்கு நண்பர்களிடமோஉறவினர்களிடமோ தந்துபாஸ்வேர்டைச் சொல்லிபணம் எடுக்கச் சொல்லுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய ஏ.டி.எம். கார்டு என்பது உங்களுக்கு மட்டுமேயான பிரத்யேகமானது என்பதை உணருங்கள்.

  • ஒரே ஏ.டி.எம். சென்டரை தொடர்ச்சியாக பணம் எடுக்கப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அந்த சென்டர் உங்களுக்கு நன்கு பழகிவிடும். மிஷினில்திருடர்களால் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் நீங்கள் உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதுபோலவே தெருமுனைகளில் இருக்கும் ஏ.டி.எம். சென்டர்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும்,வங்கியோடு இணைக்கப் பட்டிருக்கும் ஏ.டி.எம். சென்டர்களை உபயோகிப்பதுபாதுகாப்பானது. ஏனெனில்இவற்றை திருடர்கள் எளிதாக அணுகிவிட முடியாது.

  • ஏ.டி.எம்மிலோஇணையத்திலோ எந்தப் பரிவர்த்தனை செய்யப்பட்டாலும்உங்கள் மொபைல் எண்ணுக்கு அது தொடர்பான செய்தியை உடனே வங்கி அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல். இதன் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்தினால்உடனே உங்களுக்கு செய்தி வந்துவிடும். எனவேஇதுவரை உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்குத் தகவல்களுக்கு தரவில்லையென்றால்உடனடியாகத் தந்து, ‘அலர்ட்’ வருமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

  • ஏ.டி.எம். சென்டருக்குள் கார்டைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ,மிஷினில் உங்கள் கார்டு சிக்கிக் கொண்டாலோ முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடாதீர்கள். யாரேனும் அவ்வாறு உதவ முற்பட்டாலும் நாகரிகமாக மறுத்துவிடுங்கள். வங்கியின் செக்யூரிட்டி ஒருவர் நிச்சயமாக அங்கிருப்பார். அவரிடம் தகுந்த ஆலோசனை பெறுங்கள்.

  • ஏ.டி.எம். மிஷினில் உங்கள் கார்டு மாட்டிக் கொண்டால்உடனே அந்த இடத்தை விட்டு அகலாதீர்கள். வங்கிக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினால்உடனடியாக தற்காலிகமாக அந்த அட்டையை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி முடக்கி வைப்பார்கள். அதுபோலவே கார்டு தொலைந்துவிட்டால், அடுத்த நொடியே வங்கியைத் தொடர்புகொண்டு கார்டை முடக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

  • ஏ.டி.எம். மானிட்டரில் ஏதேனும் எச்சரிக்கைச் செய்தி தென்பட்டால்அந்த மிஷினைப் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள்.

  • ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துபவர்கள் பாஸ்வேர்டு அமைப்பதில் கவனம் தேவை. எழுத்துகளோடுஎண்கள் மற்றும் சிறப்புக் குறிகள் அமைந்த பாஸ்வேர்டாக அமைப்பது நலம். எவ்வகையிலும் உங்கள் பெயர்உங்கள் உறவினர்கள் பெயர்பிறந்த நாள்திருமண நாள் உள்ளிட்ட விவரங்கள் உங்கள் பாஸ்வேர்டில் அமையும்படி பார்த்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் இதை சுலபமாக யூகித்து விடுவார்கள். உங்கள் பாஸ்வேர்டை நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருங்கள். இதுபோன்ற பிரத்யேகமான பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதை விட OTP என்று வங்கிகளால் ஒவ்வொரு முறையும் தனித்தனியாகத் தரப்படும் One Time Password முறையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

  • வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையம் உட்பட எங்குமே தேவையின்றி வெளியிடாதீர்கள். எவ்வளவுதான் பாதுகாப்பானது என்று நாம் நம்பினாலும்இணையம் ஒரு திறந்தவீடு என்பதே உண்மை.

இவையெல்லாம் பொதுவான பாதுகாப்பு வழிமுறைகள். புதிய தலைமுறை’ உங்களுக்கு ஒரு பிரத்யேக ஆலோசனையைத் தர விரும்புகிறது.

உங்களுக்குச் சம்பளம் போடப்படும் வங்கிக் கணக்கிற்கு மட்டுமே ஏ.டி.எம். அட்டை / ஆன்லைன் பேங்கிங் போன்ற வசதிகளைப் பயன்படுத்துங்கள். இந்த வங்கிக் கணக்கில்,பெட்ரோல் உள்ளிட்ட உங்கள் குறைந்தபட்சத் தேவைக்கான பணம் மட்டுமே மிச்சமிருப்பதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை கார்டு திருடப்பட்டாலோஆன்லைனில் தகவல்கள் களவாடப்பட்டாலோ உங்களது இழப்பும் குறைவாகவே இருக்கும்.

ஒரு தேசிய வங்கியில் இன்னொரு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கணக்கிற்கு ஏ.டி.எம். அட்டை வேண்டாம். ஆன்லைன் பேங்கிங் வசதியும் வேண்டாம். மரபார்ந்த வங்கி நடைமுறைகளை மட்டுமே இந்தக் கணக்கிற்கு செயல்படுத்துங்கள். உங்களுக்கும்உங்கள் மனைவிபெற்றோர் உள்ளிட்டோருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியக் கணக்காக இது இருக்கட்டும். உங்கள் சேமிப்பு இந்தக் கணக்கில் மட்டுமே இருக்கட்டும். உங்கள் ஏ.டி.எம்.கார்டு பயன்படுத்தும் கணக்கில் சேமிப்பு குறையும்போதுஇதிலிருந்து எடுத்துஅதில் போட்டு அவ்வப்போது நிரப்பிக் கொள்ளுங்கள்.

ஒன்று மட்டும் உண்மை... திருடர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள் அல்லர். எல்லாம் தெரிந்த நம்மையேஏமாற்றிவிடும் அளவுக்கு ஏகாம்பரங்களும் அல்லர். நாம்தான் அஜாக்கிரதையாக ஏமாறுகிறோம். அவர்களுக்குத் தேவையான தகவல்களை எங்கோஎப்படியோ கொடுக்கிறோம். இந்த உண்மையை உணர்ந்துஎப்போதும் எச்சரிக்கையுணர்வுடன் இருந்தால்எப்படிப்பட்ட கொம்பனாலும் நம்மை ஏய்த்துவிட முடியாது.

காவல்துறைக்கு ஒத்துழையுங்கள்!


பிரைம் பாயிண்ட்’ சீனிவாசன்தலைவர்இந்திய சைபர் சொசைட்டி

சமீபகாலமாக ஏ.டி.எம். அட்டை தொடர்பான திருட்டுப் பிரச்சினைகள் மட்டுமின்றிஏராளமான சைபர் க்ரைம்களையும் நாங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு குறைவானதாக இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன. கல்லூரிகள் மற்றும் அமைப்புகள் மூலமாக தொடர்ச்சியாக கருத்தரங்கங்கள் நடத்திவிழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். காவல்துறையினருக்கும் பயிற்சியளிக்கிறோம். நம் காவல்துறையினர்இந்திய தண்டனைச் சட்டம் தொடர்பான விஷயங்களில் வல்லுநர்கள். சைபர் க்ரைம்கள் நம் நாட்டுக்குப் புதியது என்பதால்அது தொடர்பான நிறைய புகார்கள்தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தால்தான் மேற்கொண்டு அவர்கள் இத்துறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஏ.டி.எம். கார்டு திருடு போன்ற விஷயங்களை மக்கள் காவல்துறையிடம் கொண்டுசெல்லத் தயக்கம் காட்டுகிறார்கள். ஏனெனில் மற்ற குற்றங்கள் மாதிரியில்லாமல்குற்றவாளிகள் பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவோஉறவினர்களாகவோநெருங்கியவர்களாகவோ,தெரிந்தவர்களாகவோ இருந்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் தயங்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஓர் இழப்பு தெரிந்தவர்களால் ஏற்பட்டாலும் கூடஅதை உடனடியாக ஈடு செய்யாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். நம் தமிழ் நாட்டுக் காவல்துறையின் சைபர் பிரிவு,இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் சைபர் பிரிவாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்களிடம் கொண்டு செல்வதின் மூலமாகத்தான் உங்களால் தீர்த்துக்கொள்ள முடியும்.ஒரு ஏ.டி.எம். குற்றம் நடந்தது என்றால்உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரியப்படுத்திவிட்டு அடுத்துசைபர் போலீஸாருக்குத் தெரியப்படுத்துவதுதான் அறிவார்ந்த செயலும் கூட.

ஏ.டி.எம்./கிரெடிட் கார்டுஇணையக் குற்றங்கள் என்று எதில் சந்தேகமிருந்தாலும்ஆலோசனை தேவைப்பட்டாலும் மக்கள் எங்களை மின்னஞ்சல் மூலமாக எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். எங்கள் மின்னஞ்சல் முகவரி : info@cysi.in

நூதனக் கொள்ளை!

சமீபகாலமாக செய்தித்தாள்களில் பரபரப்பான விஷயம் இதுதான்... ஏ.டி.எம்./கிரெடிட் கார்டுகள் அதன் வாடிக்கையாளருக்கு கூரியர் மூலம் சென்று சேருவதற்கு முன்பாகவேஅதன் தகவல்கள் கூரியரில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக, ‘ஸ்கிம்மர்’ மிஷின் வைத்து திருடப்படுகிறது. இந்தத் தகவல்கள் வெளிநாடுகளில் இருக்கும் சைபர் திருடர்களுக்கு விற்கப்பட்டுஅவர்கள் மூலமாக, ‘ஆன்லைனில்’ லட்சக்கணக்கில் சுருட்டப்படுகின்றன. கூரியர் பாய்ஸ்’ உள்ளிட்ட குற்றவாளிகள் பலரையும் போலீஸ் கைது செய்துதீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த நவீன மோசடியிலிருந்து தப்பஒரு வழிதான் இருக்கிறது. உங்களுடைய ஏ.டி.எம்./கிரெடிட் கார்டினை தபால் மற்றும் கூரியரில் பெறாதீர்கள். வங்கிக் கணக்கு துவக்கும்போதே,சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கார்டினை நேராக வங்கிக்கு வந்து பெற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிடுங்கள். ஒருமுறை வங்கிக்குச் செல்வதற்கு சோம்பல் பட்டால்நம் கடின உழைப்பு மூலம் சேமித்த பணம் இதுபோல நாம் கண்ணால் கூடப் பார்த்திராத கொள்ளைக்காரர்கள் மூலம் கொள்ளைபோக வாய்ப்பிருக்கிறது.

வங்கிகள் செய்யலாமே?

பயோ-மெட்ரிக் முறை இப்போது பரவலாக பல இடங்களிலும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அட்டெண்டன்ஸ் கூட நம் விரல் ரேகை மூலம் பதியப்படும் முறைபல அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஏ.டி.எம். சென்டர்களில் பாஸ்வேர்டு முறைக்குப் பதிலாக வாடிக்கையாளரின் விரல்ரேகையைப்’ பயன்படுத்தும் முறையைக் கொண்டுவந்தால்மேலும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏ.டி.எம். திருடர்களின் கொட்டத்தையும் ஓரளவு அடக்க முடியும்.

No comments:

Post a Comment