சர்ச்சை
ஆ.பழனியப்பன்
ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், ஐ.டி. பார்க் - இவற்றைக் காட்டிலும் பிரமாண்டமும், வசீகரமும் கலந்து அண்ணாந்து பார்த்து பிரமிக்க வைக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். சிலநாட்களுக்குமுன் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று தமிழக அரசு திடீரென அறிவித்ததில் இருந்து மக்களின் வருகை இந்நூலகத்திற்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்திருப்பதால் ஒரு பரபரப்பும் நிலவி வருகிறது.
நூலகத்திற்கு கடந்த ஞாயிறன்று ஒரு விசிட் அடித்தோம். விடுமுறை நாள் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஏராளமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது பார்க்கிங் பகுதி. கையொப்பமிட்டு நூலகத்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர் மக்கள். ‘சில்ட்ரன் ஹாஸ்பிட்டலாக இதை மாற்றப் போறாங்களாம். அதான், அதுக்குள்ளே பார்த்துட்டு போயிடலாம்னு வந்தோம்’ என்கிற முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டேயிருந்தன.
உள்ளே நுழைந்ததும் நாம் கண்ட காட்சி திகைப்பையும் பெருமிதத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது...ஆம், வசதிபடைத்தவர்கள், நடுத்தரக்குடும்பத்தினர், குடிசைப்பகுதி மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களது பிள்ளைகளோடு வந்து, விருப்பமான புத்தகங்களை ஆர்வத்தோடு வாசித்ததைப்பார்க்கையில், நூலகத்தின் குளுமையைவிட அதிகமாகக் குளிர்ந்துபோனது நம் மனது.
ஏழு தளங்கள் கொண்ட இந்தக் கண்ணாடி மாளிகை, முற்றிலுமாக ஏ.சி. வசதி, கிரானைட் தரை, சொகுசு இருக்கைகள் என அசத்தலாக இருக்கிறது.
நூலகத்திற்குச் செல்வது, அங்குள்ள புத்தகங்களைப் படிப்பது என்பதுதான் வழக்கமானது. ஆனால், வீட்டில் இருந்து சொந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதற்கென்றே தரைத்தளத்தில் தனிப்பகுதி உள்ளது. அப்பகுதி முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. புத்தகங்களையும், மடிக்கணினிகளையும் கொண்டு வந்து படிப்பதிலும், குறிப்பெடுப்பதிலும் மும்முரமாக இருக்கின்றனர் இளைஞர்கள்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், சி.எல்.ஆர்.ஐ. போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் இந்நூலகம் அமைந்துள்ளதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இங்கு பயிலும் ஏராளமான மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.
குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பகுதி, மழலைப் பட்டாளத்தால் திணறிக் கொண்டிருக்கிறது. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மேசைக் கணினிகளில் குழந்தைகள் குதூகலத்துடன் ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள செயற்கை மரத்தின் அடியில் அமர்ந்து, புத்தகங்களைக் காண்பித்து தங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள். அந்தக் காட்சியை ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜெயராமன் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார்.
"இங்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழக அரசின் அறிவிப்பு வந்ததால், இடத்தை மாற்றுவதற்குள் நூலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு வந்தேன். இந்நூலகத்தைப் பார்த்துவிட்டு அசந்து போவிட்டேன். சென்னையில் உள்ள ஒரு வெளிநாட்டு நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நேற்றுவரையில் எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது அந்த நூலகம். ஆனால், அண்ணா நூலகத்துக்கு வந்த பிறகு, அந்த வெளிநாட்டு நூலகம் ஒரு துரும்புபோல எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இப்படியொரு நூலகத்தை இனிமேல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது" என்றார் ஜெயராமன்.
முன்பெல்லாம், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்கள், கன்னிமாரா நூலக வளாகத்தில் மரத்தடிகள் மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும். ஆனால், இன்றைக்கு அவர்கள் குளுகுளு கண்ணாடி அறைகளில் சொகுசு இருக்கைகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு இந்த நூலகம் மிகப் பெரிய வரப்பிரசாதம்.இதை வேறிடத்திற்கு மாற்றினால், இதுபோன்ற வசதிகள் நிச்சயம் கிடைக்காது. ஒருவேளை, இந்நூலகத்தை மாற்றினார்கள் என்றால், என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கும்" என்று வேதனையோடு கூறினார் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வரும் அண்ணாநகரைச் சேர்ந்த சிவக்குமார்.
மக்கள் குரல்
மணிகண்டன் (கல்லூரி மாணவர்):
முந்தைய அரசின் பணிகளுக்கு சமாதி கட்டி விட்டு அதன் மீது தங்கள் புகழ் பாடும் மாளிகை கட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் நூலக விவகாரத்தில் வெளிப்படுகிறது. இந்த அறிவுக்கடலை மக்களின் எதிர்ப்பை மீறி அகற்றுவது நல்லதல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
சூர்யபிரகாஷ் (கல்லூரி மாணவர்):
இடமாற்றம் மற்றும் சீரமைப்புப் பணிகளால் பொருள் இழப்பும், தேவையற்ற நிதி இழப்பும் ஏற்படும். நூல்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகி விடும்.
சுரேஷ்குமார் (தனியார் நிறுவன ஊழியர்):
புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவுடன் அண்ணா நூலகம் இணைக்கப்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசின் முடிவை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு.
ஜோதி (பணிக்குச் செல்லும் பெண்):
குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அதை ஒரு நூலகத்திற்குப் பதிலாகத் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை.
சிவா
தற்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் சரியாக செயல் படவில்லை. அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்தால், அதுவே போதும்.
நாகராஜன்
கோட்டூர்புரம் ஒரு சுகாதாரமான பகுதி. அங்கு, குழந்தைகளுக்கான மருத்துவமனை அமைப்பது சரியான முடிவு. நூலகத்தை எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், எல்லோருமே நூலகத்திற்கு போகப்போவது இல்லை. ஆனால், மருத்துவமனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று.
முருகேசன் (ஆட்டோ ஓட்டுநர்):
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இம்முடிவை அரசு எடுத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் போல அண்ணா நூலகத்தின் மீதும் இந்த அரசு கைவைக்கக் கூடாது.
பி. வைத்தீஸ்வரன், எஸ். மனோஜ்பிரபாகர்,எஸ். கார்த்திகேயன்
நன்றி புதியதலைமுறை

No comments:
Post a Comment