Tuesday, November 22, 2011

கறுப்பு பணவிவகாரம் விசாரணை துவங்கியாச்சு - யார் ? யார் என்ற விவரத்தை வெளியிட முடியாது

மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கொடுத்து வரும் பெரும் பிரச்னைகளில் ஒன்றான கறுப்பு பண விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை தனது விசாரணையை துவக்கி விட்டது என்றும் இது தொடர்பான பட்டியல் எங்களிடம் இருக்கிறது அதே நேரத்தில் இதனை வெளியிட முடியாது என் நிதித்துறை செயலர் ஆர்.எஸ்., குஜ்ரால் கூறியுள்ளார்.

கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது . இதனை மீட்டு கொண்டு வரவேண்டும். என்றும், இதனை கொண்டு வந்தால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி வளப்படுத்த முடியும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆக்ராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் ஆர்.எஸ்., குஜ்ரால் பேசுகையில்: கறுப்பு பண விவகாரம் குறித்து பலர் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். அது தவறானது. நாங்கள் எங்கள் துறை தொடர்பான விசாரணையை துவக்கி விட்டோம். இதற்கென வெளிநாடுகளில் இருந்து 700 பேர் கொண்ட பட்டியல் பெறப்பட்டுள்ளது. இது ஜெனிவாவில் உள்ள கணக்குதாரர்கள். இவர்களின் பண பரிமாற்றம் விசாரணையில் உள்ளது. ஆனால் இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் வெளிநாடுகளினுடைய ஒப்பந்தம் அடிப்படையிலானது. எனவே பெயர் வெளியி முடியாது. மேலும் கோர்ட்டில் ரகசிய ஆவணமாக தாக்கல் செய்யப்படும். இந்த விசாரணை முழுமைபெற்று அமலாக்க துறையினரிடம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment