அறந்தாங்கி : அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக, ஒன்றிய திமுக செயலாளர் மெய்யநாதன் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று அவர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு, பணியை தொடங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் வேலுச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment