Friday, November 4, 2011

ராஜேந்திரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது கல் லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முகமது பாரூக் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.நைனாமுகமது, பி.கே.நைனாமுகமது, என். எஸ்.நைனாமுகமது, கே.நைனாமுகமது ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ஜமா அதுல்உலமா பேரவை தலைவரும், அஞ்சல் வழி கல்வி பேராசிரியருமான அப்துல் ஜப்பார் பாசில்பாகவி, சிவகங்கை மாவட்ட ஜமாஅதுல் உலமா பேரவை தலைவர் முகமது ரிமா பாஜில் பா கவி ஆகியோர் பேசினர்.  
சென்னை மகளிர் அரபிக் கல்லூரி முதல் வரும், சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவருமான சேக்அப்துல்லா பாஜில் ஜமாலி பள்ளிவாசலை திறந்து வைத்தார். மேற்பனைக்காடு, ராஜேந்திரபுரம், தொண்டி, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, புதுவயல், காசிம்புதுப்பேட்டை, ஆலங்குடி, பேராவூரணி, கறம்பக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராவுத்தர்நைனாமுகமது, மற்றும் கல்லு£ரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் அஜரத் முகமது நசீர்ஹூசைன் துவா ஓதினார். அல்அமான் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் முகமது அனிபா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment