Tuesday, October 25, 2011

ஓட்டு எண்ணிக்கையில் மாவட்ட நிர்வாகம் கோட்டை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருகட்ட உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த மாவட்ட நிர்வாகம் ஓட்டு எண்ணிக்கையில் கோட்டை விட்டதால் முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருகட்ட உள்ளாட்சி தேர்தல் வன்முறைகள், அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்துமுடிந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடந்தது.ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை குறித்து இதற்காக தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதுபோன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக எட்டு மணிக்கு துவங்க வேண்டும் என்றும், முதலில் தபால் ஓட்டுகளை எண்ணி முடித்து முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுச் சீட்டுகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இருந்தும் ஓட்டு எண்ணிக்கையின் போது நடைமுறைகள் சரியாக பின்பற்ற படாததால் பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் நடந்தது.இதற்காக ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களும் காலை ஏழு மணிக்கே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். எட்டு மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனா ல், டிபன் சாப்பிட்டு முடித்த பின்னர் தான் ஓட்டுகள் எண்ணவேண்டும் என்பதில் அலுவலர்கள் குறியாக இருந்தனர்.இதன்காரணமாக தபால் ஓட்டு எண்ணும் பணி ஒன்றரை மணிநேர காலதாமதத்துக்கு பின் 9.30 மணிக்கு துவங்கியது. இ வை எண்ணி முடிவுகள் அறிவி க்க பகல் 1.30 மணி ஆனது. இத ன்பின்னர் மதிய சாப்பாடுக்கு ஒருமணி நேரம் எடுத்துக்கொ ண்டதால் ஓட்டு எண்ணிக்கை பிற்பகல் 2.30 மணிக்கு பின்னரே துவங்கியது. பொறுமையிழந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அலுவலர்களின் மெத்தனப் போக்கை கண்டித்து குரல் எழுப்பத் துவங்கினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.
கலெக்டரின் குறிப்பிட்ட மொபைல் ஃபோனை (94441 81000) தொடர்புகொண்டபோது பிஷி, நோ ஆன்ஸர் என்ற பதி÷ ல கிடைத்தது. வெறுத்துபோன வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓட்டு எண்ணிக்கை ø மயம் அருகே பட்டாசுகளை மெ õத்தமாக வெடிக்கச் செய்தனர்.இதன் புகை ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் புகுந்ததால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கல்லூரி முன் பட்டாசுகள் வெடிக்க போலீஸார் தடைவிதித்தனர்.நிலைமையை உணர்ந்துகொண்ட அலுவலர்கள் ஓட்டு எண்ணிக்கையில் வேகத்தை காட்டத் துவங்கினர். இருந்தும் நேற்று அதிகாலை தான் ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. இதுபோன்ற நிலைமை தான் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதி ஓட்டு எண்ணிக் கை மையங்களில் நிலவியது

No comments:

Post a Comment