சென்னையில் உள்ள தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2012க்கான தொழிற்தேர்வு ஜனவரி, ஃபிப்ரவரியில் நடக்கிறது.
இதில், தனித் தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்வு எழுத விரும்புவோர் 23 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். தொழிற் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவராகவும், அரசு பதிவுபெற்ற நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற பணியாளர்களாகவும் இருத்தல்வேண்டும். இதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்நிலை தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜனவரி மற்றும் ஃபிப்ரவரியில் நடைபெறவுள்ள அகில இந்திய துணைத் தொழிற்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத முடியும்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேடுகள் அனைத்து அரசு ஐ.டி.ஐ.,க்களில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அதே அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment