Tuesday, October 11, 2011

அறந்தாங்கி நகரசபை தலைவர் பதவி காங். கட்சியில் கடும் போட்டி; அதிருப்தி வேட்பாளர் மனு தாக்கல்


அறந்தாங்கி நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.   நடைபெறவுள்ள அறந்தாங்கி நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கேட்டு திருநாவுக்கரசர் ஆதரவாளர் ஒருவரும், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவரும் முயற்சி செய்தனர். இருவருமே தங்களுக்குத்தான் வாய்ப்பு வேண்டும் என போராடியதால் டெல்லியினருக்கு வந்த காங்கிரஸ் மேலிட பார்வையாளரால் கூட சமரசம் ஏற்படுத்த முடியவில்லை.
 
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் பிஸ்மில்லா பேகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிஸ்மில்லா பேகம் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு அங்கு சீட் கிடைக்காததால் திருநாவுக்கரசு ஆதராவாளர்களின் துணையோடு காங்கிரசில் சீட் பெற்றுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
 
பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரும், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவினைப் பெற்ற வரும், உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான ஜலீலா பேகம் என்பவருக்கு சீட் மறுக் கப்பட்டதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று போட்டி வேட்பாளராக ஜலீலா பேகம் என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர். 27 வார்டுகளைக் கொண்ட அறந்தாங்கி நகராட்சியில் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் 5 பேரும், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 22 பேரும் கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் 22 கவுன்சிலர் வேட்பாளர்களும் போட்டி வேட்பாளர் ஜலீலா பேகம் என்பவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். காங்கிரசின் போட்டி வேட்பாளர் ஜலீலா பேகம் தனது ஆதரவாளர்களுடன் நகரின் முக்கிய பிரமுகர் களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
 
கணிசமான முஸ்லீம்களின் வாக்கு வங்கியைக் கொண்ட அறந்தாங்கியில் முஸ்லீம் சமூகத்திலேயே இருவர் போட்டியிடுவது திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களின் வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் தி.மு.க.வுக்கு ஆதரவான வாக்குகளாகும். முஸ்லீம் சமூகத்திலேயே இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவது தி.மு.க.வின் வாக்குகளைக் குறைக்கும் எனத் தெரிகிறது.
 
1971 முதல் அறந்தாங்கி நகராட்சியை தனது கைவசம் வைத்துள்ள திமுக இத்தேர்தலில் நக ராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது கேள்விக் குறிதான் என நகர வாக்கா ளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
நன்றி மாலை மலர் 

No comments:

Post a Comment