இந்திய அரசுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்ட பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கியாகும். இந்த வங்கியில் 'பி' கிரேட் நிலையில் 75 அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இடங்களுக்கு எஸ்.சி., எஸ்.சி., ஓ.பி.சி., ஆகியோருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்:
ஆர்.பி.ஐ.,யின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.09.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது ஆராய்ச்சிப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது சி.ஏ., ஏ.சி.எஸ்., பி.ஜி.டி.எம்., எம்.பி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு குறைந்த பட்ச மதிப்பெண்களில் சில சலுகைகள் உள்ளன. முழுமையான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

இதர விபரங்கள்:ரிசர்வ் வங்கியின் அதிகாரிப் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் எதிர்கொள்ளலாம்.
ஆர்.பி.ஐ.,யின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/க்கான டி.டி.,யை Reserve Bank of India என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இந்தக் கட்டணம் கிடையாது. போஸ்டல்ஆர்டர்கள் மூலமாகவும் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியும். டி.டி.,யின் பின்புறம் உங்களின் பெயரையும், முகவரியையும்தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பத்தை செலுத்திய பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் 26.09.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். ஆப்லைனிலும் விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The General Manager,
Reserve Bank of India Services Board,
Post Bag No : 14501,
Mumbai Central Post Office,
Mumbai - 400 008.
The General Manager,
Reserve Bank of India Services Board,
Post Bag No : 14501,
Mumbai Central Post Office,
Mumbai - 400 008.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 26.09.2011
இணையதள முகவரி: www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id-=2411
No comments:
Post a Comment