புதுக்கோட்டை: "அரசு கேபிள் "டிவி' நிறுவனம் மற்றும் மாவட்டங்கள்தோறும் உள்ள கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைகளில் பணியாற்ற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்' என கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் சார்பில் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டாம் தேதி முதல் கேபிள் "டிவி' சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதை திறன்பட நிர்வகிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு பொது மேலாளர் (ஆப்ரேஷன் பிரிவு) மற்றும் வளர்ச்சி மேலாளர் (விற்பனை பிரிவு) பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இம்மாதம் 22ம் தேதிக்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் லிட், ராக் தர்பார்-பிளாட் நம்பர்-1எ, முதல் தளம், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இதுபோன்று மாவட்டங்கள்தோறும் திறக்கப்பட்டுள்ள அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைகளை நிர்வகிக்கும் விதமாக டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீஷியன், அசிஸ்டென்ட் டெக்னீஷியன் மற்றும் லைன்மேன் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களில் பணியாற்ற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் இம்மாதம் 22ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment