வரும் 22ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 20 மற்றும் 21ம்தேதி வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வினை பள்ளி மாணவராகத் தேர்வெழுதி ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்து, தற்போது தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக சிறப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
மார்ச் மாத மேல்நிலைத் தேர்வு அல்லது அதற்கு முந்தைய பருவங்களில் தனித் தேர்வர்களாகத் தேர்வெழுதி ஒன்று அல்லது 3 பாடங்கள் வரை தோல்வியடைந்து, சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வரும் 22ம்தேதி துவங்கி ஜூலை 2ம்தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு வரும் 20 மற்றும் 21ம்தேதிகளில் ஹால்டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஹால்டிக்கெட் வினியோகிக்கப்படும் இடங்கள் கல்வி மாவட்டங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு - செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
காஞ்சீபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்
பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்
சென்னையில் அனைத்து கல்வி மாவட்டங்கள் - மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்).
காஞ்சீபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்
பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்
சென்னையில் அனைத்து கல்வி மாவட்டங்கள் - மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்).
ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் பதிவு எண், தேர்வு மையம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டும். மேலும், செய்முறை, மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைச் செய்ய வேண்டியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தேர்வைச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment