புதுக்கோட்டை: புதுக்கோடை அரசு அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம் நேற்று முதல் துவங்கியது. புதுக்கோடை அருங்காட்சியக வளாகத்தில் கோடைகால பயிற்சியில் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் கண்ணாடி ஓவியம் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பயிற்சி வகுப்புகளை ஓவியர்கள் ஐயப்பன், ராஜப்பன் ஆகியோர் நடத்தினர். பயிற்சி முகாமை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாம் மே மாதம் 18 தேதி வரை நடைபெறும்.
No comments:
Post a Comment