Monday, May 16, 2011

அறந்தாங்கி நேஷனல் மெட்ரிக் பள்ளி ப்ளஸ் 2 தேர்வில் சதமடித்து சாதனை

அறந்தாங்கி: நடந்து முடிந்த ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அறந்தாங்கியில் புதுகை ரோட்டில் அமைந்துள்ள நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளியில் மொத்தம் 33 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 16 பேர் மாணவர், 17 பேர் மாணவியர் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஏ.ஆயிஷாசித்திகா 1,156 மார்க் பெற்று அறந்தாங்கி பள்ளிகளிலேயே முதலிடம் பெற்று கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 188, ஆங்கிலம் 186, இயற்பியல் 199, வேதியியல் 197, உயிரியல் 186, கணிதம் 200.
எம்.கவிதா என்ற மாணவி 1,093 மார்க் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 187, ஆங்கிலம் 171, இயற்பியல் 185, வேதியியல் 184, உயிரியல் 168, கணிதம் 198.
ஏ.ராம்பிரபு என்ற மாணவன் 1,074 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மார்க்: தமிழ் 180, ஆங்கிலம் 157, இயற்பியல் 185, வேதியியல் 183, உயிரியல் 175, கணிதம் 194.
மேலும், 1,000 மார்க்குக்கு மேல் ஐந்து மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். அவர்கள் விபரம்:
ஆயிஷா சித்திகா 1,156, கவிதா 1,093, ராம்பிரபு 1,074, துர்கா தேவி 1,007, கௌசல்யா 1,000.
இப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 100 சதவீதம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், இந்த வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும், வெற்றிக்கு ஒத்துழைப்பு தந்த பெற்றோர்களையும், பள்ளி தாளாளர் முகமது மன்சூர், பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹீமான் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நகரில் முக்கிய பிரமுகர்களான ரோட்டரி சங்கத்தலைவர் பீர்ஷேக், முன்னாள் தலைவர்கள் கைலாசநாதன், சந்திரமோகன், உலகநாதன், ராஜ்மோகன், வீரமாகாளியப்பன், ஆறுமுகம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரிய கழகத்தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment