Sunday, January 31, 2010

நானோ தொழில்நுட்பம்


மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது,அதுதான் நானோ டெக்னாலஜி என்பது,
இன்னும் சிறிது காலத்தில்,உலகில் உள்ள அத்தனை சமாச்சாரங்களையும் ஆட்டிவைக்கப்போவது இந்த நானோ தொழில்நுட்பம்தான்,

இதை
நாம் தெரிந்துகொள்ளாவிட்டால் அதைவிட பெரியநஷ்டம் ஏதும்மில்லை,இதை பிரபல
எழுத்தாளர் சுஜாதா மிக அருமையாக கூறி இருக்கிறார்,இந்த புதிய
தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் சதா மெகா சீரியலில்
அரை மயக்க நிலையிலும்,நடிகைகளின் இடுப்பளவிலும் தான் ஆழ்ந்து
இருப்பீர்கள்,உலகம் நம்மை 
புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய் விடும்" என்று எழுத்தாளர் சுஜாதா கூறி இருப்பது 
நூற்றுக்கு நூறு சத்தியமான உண்மை

நானோ
டெக்னாலஜி என்பது மிக சிக்கலான தொழில்நுட்பம் தான் என்றாலும்,அதன்
அடிப்படை என்ன, என்ற ஆரம்ப அடிச்சுவடியையாவது தெரிந்துகொண்டே ஆக வேண்டும்
அதை தெரிந்து கொள்ள ஓரளவு கவனம் செழுத்தினால் போதும்

அனைத்து எலக்ட்ரானிக் கருவிகள்
எரிசக்தி
கம்ப்யூட்டர்
மருத்துவம்
விவசாயம்
கார் பாகங்கள் 
ஆடை தயாரிப்பு
என்று
ஒரு துறையை கூட பாக்கி இல்லாமல் அனைத்துமே இனிமேல் நானோ தொழில்நுட்பத்தை
தான் நம்பி இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே,மிகப்பெரிய எதிர்காலத்தின் ஆரம்பவாசல் கதவான நானோ தொழில்நுட்பம் பற்றி ஓரளவு தெரிந்துகொள்வதற்காத்தான் இந்த கட்டுரை.
ஏதோ
தொழில்நுட்பம்தானே? இந்த அறுவை நமக்கு எதற்கு என்று நினைத்து வேறு தளம்
போய் விடாதீர்கள்,இந்த தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்வது துப்பறியும்
கதை போல சுவாரசியமாக இருக்கும்

சரி நானோ என்பது என்ன?
எந்த பொருளையும் நீள அகலத்தால் அளப்பதற்கு மில்லி மீட்டர்,சென்டிமீட்டர்,மீட்டர் என்ற அளவு முறையை நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா?
அதாவது ஒரு மீட்டரில் நூறில் ஒரு பங்கு ஒரு சென்டிமீட்டர் ஆகும்.
ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மில்லிமீட்டர் ஆகும்
ஒரு
மீட்டரில் நூறு கோடில் ஒரு பங்கு தான் நானோ மீட்டர் எனப்படுகிறது,ஓரளவு
புரியும்படி கூறுவது என்றால் குண்டூசி முனையுல் லட்சத்தில் ஒரு பங்கு
எனலாம்,இந்த மிக சிறிய அளவை நம்மால் சாதரணமாக பார்க்கமுடியாது.
அணு
அளவில் கையாளாப்படும் இந்த தொழில்நுட்பம்தான் நானோ தொழில்நுட்பம்
எனப்படுகிறது,இந்த தொழில்நுட்பத்தின் ஆதாரம்,அணு அளவில் எந்த ஒரு
செயலையும் செய்யமுடியும் என்பதுதான்,
எல்லா பொருட்களுக்கும் ஆதரமாக
இருப்பது அந்த பொருட்களின் அணு கட்டமைப்பு,அந்த பொருள் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்ற ரகசியம் அதன் அணு கட்டமைப்பில் இருக்கிறது,அந்த அணு
கட்டமைப்பை மாற்றினால் அந்த பொருள் வேறு வடிவம் பெறுகிறது.
மண்ணுக்குள்
பல ஆண்டுகளாக வெப்பத்திலும் அடர்த்தியுலும் புதைந்து கிடக்கும்
கரிக்கட்டையின் அணுவில் மாற்றம் ஏற்படும்போது அது வைரமாக மாறுகிறது.
காற்று,தண்ணீர்,மண் ஆகியவற்றின் அணுக்களின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும்போது அது செடி,கொடி,மரம் ஆகிறது
இதுவரை
இயற்கை மட்டுமே அரங்கேற்றிய இது போன்ற அதிசிய மாற்றத்தை ஆராய்ச்சி
சாலையில் அமர்ந்தபடி நம்மாலும் செய்யமுடியும் என்று கண்டுபிடித்து
இருக்கிறார்கள்,அணுகட்டமைப்பை நமது தேவைக்கு தகுந்தபடி எப்படி மாற்றுவது
என்பது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்கிறது,நமது உடலுக்கு ஆதாரமாக
இருப்பது ந்மது "டி.என்.ஏ"எ
எனப்படும் மரபு அணு.
நடிகை நமீதா
இவ்வளவு உயரமாக,இந்த அளவு கவர்ச்சியான கண்களுடன் இந்த மாதிரி
மூக்குடன்,இந்த மாதிரி பொன் நிறத்துடன் இருக்க வேண்டும் என்பது அவரது மரபு
அணுவில் எழுதப்பட்டு இருக்கும்
ஒவ்வொருவர் உடலில் இருக்கும் இந்த மரபு
அணு ரகசியம் தான் அவர்களை அதற்கு தக்க உடல் அமைப்புடனும்
குணாதிசயங்களுடனும் அவர்களை உருவாக்கிறது
அவ்வாறு எழுதப்பட்டு
இருக்கும் கட்டளை போல அணு அளவில் நம்மாலும் எழுத முடியும் அல்லது ஏற்கனவே
எழுதப்பட்ட கட்டளைகளை மாற்றி அமைக்க முடியும் என்று முயற்சிக்கிறார்கள்
நமது விஞ்ஞானிகள்,

உடல் அமைப்பு மட்டும் அல்லாமல்,எல்லா
பொருட்களின் அணு கட்டமைப்பையும் மாற்றி இயற்கையோடு இணைந்து
பிரமிப்பூட்டும் வளர்ச்சியை காண ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன,
இவ்வாறு அணு அளவில் எதையும் செய்ய முடியும் என்பதில் ஓரளவு
வெற்றிகண்டதன் தொடர்ச்சியாக நானோ தொழில்நுட்பம் இப்போது சில பொருட்களில்
அறிமுகம் ஆகிவிட்டது நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி முழு ழ்ளவில்
வெற்றிபெறும் போது அதன் பயன்கள் அளவிட முடியாததாக இருக்கும்

ஆச்சிரியமான தயாரிப்புகள்

நானோ தொழில்நுட்பம் இப்போதே பல துறைகளில் வந்துவிட்டது

கார் கண்ணாடி வழியாக சூரிய வெளிச்சம் ஊடுருவும்,இரவில் எதிரே வரும் வாகனங்களில் இருந்து வரும் வெளிச்சத்தால் கண்கள் கூசும்
இதை
தவிர்க்க நானோ தொழில் நுட்பம் மூலம் புதிய வகை சன் கிளாஸ் தயாரித்து
இருக்கிறார்கள் இந்த கண்ணாடி பர்ப்பதற்கு வெண்மையாக இருக்கும்,ஆனால்
சூரிய வெளிச்சத்தையும்,எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்துகிறது

நானோ
துகள்கள் கொண்ட கலவை மூலம் தயாரிக்கப்படும் கார் பம்பர்கள் எடை அதிகம்
இல்லாமல் இருக்கின்றன,ஆனால் இபோதைய கார் பம்பர்களை விட அதிக உறுதியாக
இருக்கின்றன

நானோ துகள் கலவை கொண்டு தயாரிக்கப்படும் நூல் இழைகளில்
கறை படிவதில்லை,இதன் மூலம் அழுக்கு அல்லது எந்த கறையும் அண்ட முடியாத
ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன,

எளிதில் உடையாத டென்னிஸ்,மற்றும் கோல்ப் பந்துகள் ,டென்னிஸ் ராக்கெட்டுக்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன

மிக குறைந்த மின்சக்தியில் அதிக வெளிச்சம் கொண்ட பல்புகள் தயாரிக்கப்படுகின்றன

கம்பியூட்டர்களில் குறைந்த இடத்தில் மிக அதிக அளவில் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் கருவிகள் செய்து இருக்கிறார்கள்

இது
போல இன்னும் பல துறைகளில் நானோ தொழிநுட்பம் மிக அதிக அளவில் புரட்சி செய்ய
இருப்பது மருத்துவம்,தகவல் தொழில் நுட்பம்,கம்பியூட்டர்,எரிசக்தி
ஆகியவற்றில்தான்
மருத்துவத்தில் செய்ய இருக்கும் புரட்சியால் கத்தி
இன்றி ரத்தம் இன்றி உடனடியாக நோயை கண்டுபிடித்து குணப்படுத்தும் காலம்
விரைவில் வர இருக்கிறது
கம்ப்யூட்டர்,தகவல் தொழில்நுட்ப புரட்சியால்
இப்போது இருக்கும் கம்ப்யூட்டர்கள் எதிர்காலத்தில் அளவில் மிக மிக
சிறியதாகவும் ஆற்றலில் பல மடங்கு வேகமாக செயல்படவும் ஆகிவிடும்
எரிசக்தியில்
நிகழ இருக்கும் புரட்சியால் சூரிய ஒளியை கொண்டு பல மடங்கு எரிசக்தியை
உருவாக்கி எதிர்காலத்தில் மின்சாரமோ பெட்ரோல் டீசலோ தேவையே இல்லை என்ற
நிலையை உருவாக்கலாம்
இதுபோல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இருக்கும் நானோ தொழில்நுட்பம் வெறும் கனவல்ல,எதிர்கால சத்தியம்.

இந்தியவை பொறுத்த வரை நானோ தொழில்நுட்பத்தின் தந்தை என்று நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமை கூறலாம்
அப்துல் கலாம் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் நானோ தொழில்நுட்பம் பற்றி ஒருசில வார்த்தைகளாவது சொல்ல தவறுவது இல்லை
நானோ தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி சக்த்தியின் பயன்பாட்டை 45 சதவீத அளவிற்கு உயர்த்தினால் இந்தியாவின் எரிசக்தி தேவையின் 
பெரும்பகுதி நிறைவேற்றுப்பட்டுவிடும்,எனவே நானோ தொழில்நுட்பத்திற்கு அதிக அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. மேலும் இதுபோல் புரியும்படி எழுதுங்கள்;
    மின் தமிழ்க் குழுமத்துக்கும் அறிவியல்சார் கருத்துக்களை அனுப்புங்கள்

    தேவ்

    ReplyDelete